கொக்கூர் கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஆலய மகா கும்பாபிஷேகம்
கொக்கூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கொக்கூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 26 ஆம் தேதி முதல் கால யாகசால பூஜை தொடங்கியது.
அதனை தொடர்ந்து இன்று 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாள வாத்தியங்களோடு கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

பின்னர் புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


