நெய்வேலியில் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா…
கடலூர் மாவட்டம், நெய்வேலி மேல்பாப்பனப்பட்டு கிராமத்தில் எருந்தருளி இருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 4- ஆம் தேதி மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூசை, மகா கணபதி கோமம், நவக்கிரக கோமம், கோ பூசை உள்ளிட்ட மகா பூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனை காட்டபட்டது.
அதனை தொடந்து கோமாதா பூசை நாடிசந்தானம், அர்ச்சனையும் மகா தீபாராதனை காட்டபட்டு இரண்டாம் கால பூசை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று காலை சிறப்புபூசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழா மகா பூர்ணாகதி, மகா தீபாராதனை காட்டபட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் எடுத்து செல்லபட்டு ஸ்ரீ பிடாரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்தி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கும்பாபிஷேகத்தினை கண்டுகளித்தனர்.


