மிக பழமையான ஸ்ரீ மகா ஓம் சக்தி ஆலய மகா கும்பாபிசேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமத்தில் மிக பழமையான ஸ்ரீ மகா ஓம் சக்தி ஆலயம்.
கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து புனித நீர் கடங்களை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜை நடைபெற்று பூர்ணாஹீதி நடைபெற்று தீபாதரனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுரத்தை அடைந்தது.
தொடர்ந்து கோபுரகலசத்தில் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிசேகம் மிக சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
இக் கும்பாபிசேகத்தை கோயில் குலதெய்வ காரர்களும் பக்தர்கள் கும்பாபிசேகத்தை கண்டு பக்தி பரவசத்தில் முழ்கி அம்பாளின் அருளை பெற்றனர்.