மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவை
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசிமாதம் பௌர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை நடைபெற்று வருகிறது.
5 கருடசேவை மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மட்டும் நிகழ்த்தப்படுவது தனிச்சிறப்பு.
அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் ஐந்து கருட சேவையில், கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்து தங்கக்கருடவாகனத்தில் வியூக சுந்தரராசப் பெருமாளும், மற்றொரு கருடவாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில்.

மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோயிலில் உள்ள உற்சவரான ரெங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோயிலிலிருந்து மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர் கோயில் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.


