மதுரை பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலை – மதுரை பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜகவினர் பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருவதை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

முனிச்சாலை பகுதியில் உள்ள வணிக வளாகம் உட்பட பல பகுதிகளில் மேளதாளங்களுடன் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி பீகார் தேர்தல் கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


