பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ மகா காமாட்சியம்மன் ஆலய பால்குட திருவிழா
பாபநாசம் அருகே மதகரம் ஸ்ரீ மகா காமாட்சியம்மன் ஆலய பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் பால்குடம் ,காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்…...
பாபநாசம் அருகே மதகரம் புதுத்தெரு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா காமாட்சியம்மன் கோவில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பொய்கை ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் காவடி அலகு காவடி கத்தி காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதியுலா வந்து மதகரம் புதுத்தெரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
பால் கூட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

விழாவில் மதகரம் புதுத்தெரு கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிப்பட்டனர்.


