in

பா.ஜ.க, மற்றும் த.வெ.க., உடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என, ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்

பா.ஜ.க, மற்றும் த.வெ.க., உடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என, ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்

நான் 2014ல் பா.ஜ.,வில் இருந்து கொண்டே தொழில் செய்து வந்ததால் அரசியலில் என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. லட்சிய ஜனநாயககட்சி ஆரம்பித்ததில் இருந்து, எனது வளர்ச்சியை பார்த்து விட்டு என்னுடன் கூட்டணி வைக்க நிறைய பேர் வருகின்றனர். கட்சியை இப்போது தான் கட்டமைத்து வருகிறோம். யாருக்கும் பயந்து கூட்ணிக்கு செல்லவில்லை.

எங்களது பலம் அனைவருக்கும் தெரியும். 15 தொகுதிகளில் போட்டியிடும் அளவிற்கு ஆட்கள் இருக்கின்றனர்.கூட்டணி குறித்து த.வெ.க., மற்றும் பா.ஜ., உடன் பேசி வருகிறோம்.

இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை.மக்களின் தேவைக்காக பா.ஜ.,வுடன் கூட்டணி பேசப்படுகிறது. த.வெ.க.,விடம்இருந்து சரியான பதிலுக்கு காத்திருக்கிறோம். மருந்து ஊழலில் அனைத்து கட்சியினரும் சம்பந்தபட்டு இருக்கின்றன.கூட்டணி அமைந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்’ என்றார்.

What do you think?

பத்ம விருதுகள் 2026: “நானும் அவரும்” மம்முட்டிக்கு கமல் கொடுத்த வாழ்த்து