in

கணவன் மனைவி ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை

கணவன் மனைவி ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை

 

முதியவரை அடித்த கொலை செய்த வழக்கு கணவன் மனைவி ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சுசிலா இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பன்னீர்செல்வத்தை லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சுசீலா சேர்ந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் மயிலாடுதுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மணல்மேடு காவல்துறையினர் லட்சுமணன் மற்றும் சுசீலா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.

இதில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

What do you think?

அருள்மிகு முத்தாலம்மன் திருவிழா அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 சம்பா சாகுபடிக்காக கீழனையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது