in

தளபதி முதல்வரா வரட்டும், ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போம்!


Watch – YouTube Click

தளபதி முதல்வரா வரட்டும், ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போம்!

 

இங்க பாருங்க, நடிகர் விஜய் அண்ணன் இருக்காரே, தமிழ் சினிமாவுக்கே ஒரு நம்பிக்கை நட்சத்திரம்னு சொல்லலாம்.

அவருடைய படம் ரிலீஸ்ன்னா தமிழ்நாடு திருவிழா மாதிரி களைகட்டுமே… ஆனா அப்படி இனி இருக்காதுன்னு நினைச்சா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்!

ஏன்னா, அவர் எச். வினோத் டைரக்‌ஷன்ல வர்ற தன்னோட கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ல நடிச்சு முடிச்சுட்டு, இப்போ ஃபுல் டைம் அரசியல்ல குதிச்சுட்டாரு.

கட்சி ஆரம்பிச்சு, அந்த வேலைகள்ல ரொம்ப பிஸியா இருக்காரு. சினிமாவைத் தாண்டி, விஜய்யோட இந்த அரசியல் என்ட்ரி பத்தி ரசிகர்கள், பிரபலங்கள்னு பல பேர் அவங்கவங்க கருத்துக்களை சொல்லிக்கிட்டு வர்றாங்க.

அதுல ஒருத்தரா, டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான பாபா பாஸ்கர் ஒரு பேட்டியில என்ன சொல்லிருக்காருன்னா…“தளபதி முதல்வரா வரட்டும், ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போம்! எப்போதும் ஒருத்தரே தான் இருக்கணுமா என்ன? எவ்ளோ நாள் தான் பாபா பாஸ்கரே டான்ஸ் மாஸ்டரா இருப்பான், அவனுக்குப் பின்னாடி ஒருத்தர் வரணும்ல.

எல்லாமே ஒரு சுழற்சிதான். மக்களும் புதுசா தான் எதிர்ப்பார்க்குறாங்க. பார்ப்போம், எல்லாம் இறைவன் அருள்.” அப்படின்னு சொல்லியிருக்காரு!

What do you think?

கவின் தந்த பாசிட்டிவ் ‘பெப் டாக்’: தல அஜித்துடன் ஒப்பிடும் ரசிகர்கள்!

நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பில் பக்தர்களுக்கு காட்சி