in

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

 

எடப்பாடியாரின் எழர்ச்சி பயணம் சுந்தரா டிராவல்ஸ் அல்ல ஸ்டாலின் அவர்களே?

உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிற மக்களின் நம்பிக்கை பெற்ற டிராவல்ஸ்

ஸ்டாலின் அவர்களே நீங்கள் எதுக்குமே சரிப்பட மாட்டீர்கள் என்று மக்கள் சொல்லுகிறார்களே அது உங்கள் காதுக்கு கேட்கிறதா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

இன்றைக்கு ஸ்டாலின் வயிற்று எரிச்சலால், இன்றைக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வசைப்பாடி இருக்கிறார்.எடப்பாடியாரை பற்றி ஸ்டாலின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளை நாம் எப்படி மதிப்பிடுவது?

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுக்க வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை சுற்றிய தான் இருக்கிறது ,அதற்கு காரணம் அங்கே மக்கள் கடல் அலை போல திரண்டு வரவேற்கிற அந்த தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்த இந்த காட்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஸ்டாலின் அவர்களே நீங்கள் எதிர் கட்சி தலைவராக இருந்த பொழுது அன்றைக்கு கருப்பு பெட்டி வைத்து ஏமாற்றியது போதாது என்று, இன்னைக்கு ஒரு துண்டுசீட்டில் 46 சேவைகள் என அச்சடித்து யாரை ஏமாற்றுவதற்கு நீங்கள் புறப்பட்டு இருக்கிறீர்கள்? இந்த நான்கு மாதத்தில் உங்களால் செய்ய முடியுமா? நான்கரை ஆண்டு காலம் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான் இந்த மக்களுடைய கேள்வி? முதலமைச்சர் விமர்சனம் செய்யலாம் ஆனால் வயிற்று எரிச்சலால் வசைபாடக்கூடாது அதை மக்கள் வரவேற்க மாட்டார்கள்.

தன்னுடைய 50 ஆண்டுகால உழைப்பால், இன்றைக்கு மக்களின் இதயங்களில் நிறைந்து இருக்கிற எடப்பாடியார் வளர்ச்சித் திட்டங்களால் வளர்பிறையாக தமிழகத்திற்கு இன்றைக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி ,தோல்வி என்று ஸ்டாலின் ஒப்பாரி வைத்திருக்கிறார்கள்.

தோல்வி பற்றி திமுக பேசலாமா? 1991 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தீர்கள்?
2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்த கூட கிடைக்காமல் மூன்றாவது இடம் கிடைத்தது அதை போன்று 2011 நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அடைந்த தோல்வியை மறந்து விட்டாரா?

2012 சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதை மறந்து விட்டாரா?புதுக்கோட்டை இடைத்தேர்தல் நின்றால் டெபாசிட் கிடைக்காது என்பது புறக்கணித்ததை மறந்து விட்டாரா? ஏற்காடு இடைத்தேர்தலில் வீதி,வீதியாக கிராமமாக நீங்கள் சுற்றி வளர்ந்து உங்களுக்கு மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தார்களே அதை மறந்து விட்டார்களா ?

2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட திமுக ஜெயிக்க முடியாமல் போனதை ஸ்டாலின் மறந்து விட்டீர்களா? 2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி, அதுபோல ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் தோல்வி, 2017 ஆர்கேநகர் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்தில் சென்றீர்களே?

இன்றைக்கு உங்கள் ஆட்சிதான் ICU வில் வென்டிலேட்டரில் உள்ளது
உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் அதிமுக வெற்றியை கேள்விக்குறி என்று சொல்லிவிட்டு, எடப்பாடியாரை பற்றி காமெடி படத்தில் வருகிற அதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று வயித்தெரிச்சலிலே வசை பாடி இருக்கிற ஸ்டாலின் அவர்களே? நீங்கள் எதுக்குமே சரிப்பட மாட்டீர்கள் என்று மக்கள் சொல்லுகிறார்களே அது உங்கள் காதுக்கு கேட்கிறதா?

சுந்தரா டிராவல்ஸ் சென்று நீங்கள் கேலி பேசி இருக்கிறீர்களே இது சுந்தரா டிராவல்ஸ் அல்ல ஸ்டாலின் அவர்களே? மக்களின் டிராவல்ஸ், மக்களின் உயிர்நாடி டிராவல்ஸ், மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ், உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிற இந்த மக்களின் நம்பிக்கை டிராவல்ஸ்சை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம் ஸ்டாலின் அவர்களே?

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை கூட10 சகவீதம் நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்த ஸ்டாலின் திமுக அரசுக்கு பாய்,பாய் ஸ்டாலின் என டாட்டா காட்டி தருகிறார்கள் 234 தொகுதிகளிலும் வெல்கம், வெல்கம் என்று எடப்பாடியாரை வரவேற்று வருகிறார்கள்

எடப்பாடியாரின் எழுச்சி பயணம் வெற்றிவாகை சூடிட, இந்த வயிற்றெரிச்சல் ஸ்டாலினுடைய வாய் சொல்களுக்கு எல்லாம் நாம் முடிவுரை எழுதிட, எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்திட எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தின் மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை 23 வது வாரமாக கழக அம்மா பேரவையின் சார்பிலே நடைபெறும் மாபெரும் திண்ணை பிரச்சாத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும் எனக் கூறினார்.

What do you think?

பாமக சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர் சந்திப்பு

ஊழலால் தான் பிடிஆர் ஒதுங்கி இருந்தாரா- NOT FOR JOKE என கோபப்பட்ட செல்லூர் ராஜூ