in

அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வழக்கறிஞர்

அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வழக்கறிஞர்

 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வழக்கறிஞர்

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில் செஞ்சி அரசு மருத்துவமனையில் அதிமுக செஞ்சி தொகுதி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வேலவன் ஏற்பாட்டில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு 1 கிராம் விதம் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 -வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் அரசு மருத்துவமனைக்கு காலையில் சென்ற வழக்கறிஞர் வேலவன் மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பிறந்ததால் அன்று மாலை மீண்டும் சென்று 10 குழந்தைகள் பிறந்திருக்கு இன்று என தெரிந்தவுடன், அன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கணும், தாய்மார்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென பரந்த மனதுடன், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து வாழ்த்தினார்.

மேலும் தங்கம் விக்கிற விலைக்கு தங்க மோதிரத்தை வழங்கிய வழக்கறிஞர் வேலவனுக்கு குழந்தையின் தாய்மார்கள், உறவினர்கள்,மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களிடையே இந்நிகழ்வு மகிழ்ச்சியுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் பாலகிருஷ்ணன்,செஞ்சி அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சோழன்,பேரூர் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன்,சங்கர் ஒன்றிய கழக செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சோழன்,பேரூர் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், சங்கர்,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கு.கண்ணன், 8-வது அதிமுக வார்டு செயலாளர் திருமலை வார்டு கவுன்சிலர் அகல்யா வேலு,பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், மகளிரணி மல்லிகா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 800 மாணவ மாணவிகளுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்