விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா
கடலூர் மாவட்டம்,விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில்,தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கிய இவ்விழாவில். புதுமைப்பெண் ஒருங்கிணைப்பாளர் கண்ணகி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து.
சிறப்புரை நிகழ்த்தி,கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முன்னதாக, யூ எம் ஐ எஸ் தொடர்பு அதிகாரி ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழ் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார். பேராசிரியர் பிரியா விழாவை தொகுத்து வழங்கினார். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு ,மடிக்கணினி வழங்கும் விழாவை சிறப்பித்தனர்.


