in

OTT..யில் வெளியாகும் லால் சலாம்


Watch – YouTube Click

OTT..யில் வெளியாகும் லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லால் சலாம்’ கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அவர்களுடன், தம்பி ராமையா, கே.எஸ். ரவிக்குமார், லிவிங்ஸ்டன், செந்தில் மற்றும் ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்க.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் Cameo ரோலில் நடித்தனர்.

லைகா தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். சென்ற வருடம் வெளியான லால் சலாம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படம் OTT தளத்தில் வெளியாவதிற்கு காரணம் ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, ‘லால் சலாம்’ படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

ThugLife திரைப்படத்திற்கு தடை

நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’