in

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

குத்தாலம் ராஜகாளியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் எழுந்தருளியிருக்கும் ராஜகாளியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு திருநடன உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது முன்னதாக இன்று காலை ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலய வாயிலில் கும்மியாட்டம் மகுடி ஆட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் வீடுகள் தோறும் பழங்கள் மாவிலக்கு தீபமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு தோப்பு தெரு ருத்ராவதியார் ஆலயத்தில் சென்றடைந்தது தொடர்ந்து தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன நடைபெறுவது வழக்கம்.

இந்த திருநடன உற்சவமனது வருகின்ற 31 ஆம் தேதி ஒன்பதாம் நாள் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருநடன உற்சவம் நிறைவு பெறும்.

இதில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து திருநடன உற்சவத்தை கண்டு களித்தனர்.

What do you think?

கைகளைக் கட்டிய நிலையில் தொங்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி

சூர்யாவின் கருப்பு படத்தின் டிரெய்லர் வெளியானது