குத்தாலம் மகா காளியம்மன் திருநடன உற்சவம்
குத்தாலம் மகா காளியம்மன் திருநடன உற்சவம் கையில் சூலம் தீச்சட்டி குழந்தையை கையில் சுமந்து ஆடியது காண்போரை பக்தி பரவசமடைய செய்தது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருத்துருத்தி என்னும் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருநடன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் நாள் மீண்டும் ஆலயத்தை வந்தடையும் தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன உற்சவம் நடைபெறும் அதன்படி இன்று குத்தாலம் ஆஞ்சநேயர் கோயில் இருந்து புறப்பட்டு ஆலய வளாகத்தில் திருநடன உற்சவம் ஆனது நடைபெற்றது.
சூலம் தீச்சட்டி மற்றும் குழந்தையை கையில் வைத்து காளி திருநடனம் ஆடியது காண்போரை பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது தொடர்ந்து மகுடி ஆட்டம் கும்மியாட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து திருநடன உற்சவத்தை கண்டு களித்தனர்.