குன்றக்குடி வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பச்சை சாத்துதல் வைபவம்
குன்றக்குடி. ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பச்சை சாத்துதல் வைபவம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பச்சை சாத்துதல் வைபவம் நடைபெற்றது.
முன்னதாக தெப்ப மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை. சமேதராக எழுந்தருளினர் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு. சந்தனம் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்களுக்கு. புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்று பச்சை சாத்துதல் வைபவம் நடைபெற்றன தொடர்ந்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் காண்பித்து.

உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து. மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இதில் ஸ்ரீலஸ்ரீ தவத்திரு ஶ்ரீ பொன்னம்பல அடிகளார் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.


