in

மருங்குளத்தில் எழுந்தருளி இருக்கும் ஆலயங்கள் கும்பாபிஷேகம் 

மருங்குளத்தில் எழுந்தருளி இருக்கும் ஆலயங்கள் கும்பாபிஷேகம் 

 

தஞ்சை மாவட்டம் மருங்குளத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன், அருள்மிகு பாலமுருகன் ஆலயங்கள் கும்பாபிஷேகம் வான வேடிக்கையுடன் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

கலசத்தில் புனித நீர் ஊற்றிய போது பெண்கள் சாமி வந்து ஆடினர்.
பக்தர்கள் அனைவருக்கும் மா, பலா, போன்ற பயன் உள்ள மரச்செடிகள் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தில் அருள்மிகு. கற்பக விநாயகர், அருள்மிகு. முத்துமாரியம்மன். அருள்மிகு. பாலமுருகன் ஆலயங்கள் அமைந்துள்ளன.

இக்கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் புணரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

இதனையொட்டி, 30ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை துவங்கியது.

நான்காம் கால யாக பூஜை பூரணா ஹதியுடன் நிறைவு பெற்று, யாக சாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் மங்கள வாத்தியங்கள் இசையுடன் ஊர்வலமாக கோபுர கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அப்போது ஒரு சில பெண்கள் சாமி வந்து ஆடினர்.

பக்தர்கள் அனைவருக்கும் மா, பலா, போன்ற பயன் உள்ள மரச் செடிகள் வழங்கப்பட்டன.

What do you think?

5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்படும் மினி பேருந்து உற்சாகத்தில் பயணிகள்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்