படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக அஷ்டபந்தன அபிஷேகம்
மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூலவர் சிலைகளுக்கு அஷ்டபந்தன அபிஷேகம் நடைபெற்றது, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம், அபிஷேகங்களை செய்து வைத்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வழியே காவிரி ஆறு ஓடுகிறது.
இதன் இரண்டு கரைகளிலும் காசி மாநகரில் உள்ளது போல ஏழு இடங்களில் விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இன்று மூலவர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் வைபவம் நடைபெற்றது.

இதனை அடுத்து கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக நடைபெறும் அஷ்டபந்தனபிஷேகம் இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அபிஷேகங்களை செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


