அகில பாரத இந்து மகாசபை மூலம் தமிழகத்தில் சிதலமடைந்த கோயில்களை கும்பாபிஷேகம்
அகில பாரத இந்து மகாசபை மூலம் தமிழகத்தில் சிதலமடைந்த கோயில்களை கும்பாபிசேகம் செய்ய முடிவு. மாநில செயலாளர் இராம நிரஞ்சன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபை மற்றும் சிவனடியார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவனடியார் இராமலிங்க சுவாமி தலைமை வகித்தார்.
அப்போது அகில பாரத இந்து மகாசபை மாநில பொதுசெயலாளர் இராம நிரஞ்சன் கூறியதாவது. தமிழகம் முழுவதும் மிகவும் சிதிலமைந்துள்ள திருக்கோயில்களை புனருதாரணம் செய்து கும்பாபிசேகம் செய்ய அறநிலைய துறையுடன் சிவனடியார்களும் அகில பாரத இந்து மகாசபையும் இணைந்து இந்த ஆண்டுக்குள்.
மயிலாடுதுறையில் முட்டத்தில் உள்ள மகாபலிஸ்வர் கோயிலையும், நல்லத்துகுடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலையும் கும்பாபிசேகம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் தற்போது தி.மு.க.ஆட்சியில் சுமார் 3000 கோயில்களில் கும்பாபிசேகம் செய்ததை பாராட்டுகிறோம் என்றும் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.


