in

குபேரா … வசூலில் குபேரனாவாரா… குபேரா Movie Review


Watch – YouTube Click

குபேரா … வசூலில் குபேரனாவாரா… குபேரா Movie Review

 

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ Positive விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் சுனில் நரன் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரால் தயாரிப்பில் ‘குபேரா’ திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி உள்ளது.

ரோகினி திரையரங்கில் குபேரா திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் Emotional…லாக பார்த்திருக்கிறார் நடிகர் தனுஷ். ரசிகர்கள் தனுஷின் நடிப்பு, ஈர்க்கும் கதை மற்றும் பின்னணி இசையைப் பாராட்டியுள்ளனர்.

உணர்ச்சிபூர்வமான கதைசொல்லலுக்கு பெயர்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் குபேரா எப்படி இருக்கிறது என்று பார்போம்.

பணம், அதிகாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு இடையில் நடக்கும் போரட்டத்தை மையமாகக் வைத்து எடுக்க பட்ட படம். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிகாலை ஷோ..வை பார்த்த ரசிகர்கள் கைதட்டலுக்கு தகுதியான படம் என்று பாராட்டிஇருகாங்க.

பல லட்சம் கோடி மதிப்பில் ஆன எரிசக்தி வாய்வு ஒப்பந்தத்தை கைப்பற்ற நினைக்கிறார் குளோபல் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் ஜிம் சர்ப் (நீரஜ்) இந்த ஒப்பந்தத்திற்காக சட்டவிரோதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை கைமாற்ற வேண்டும் இதில் தன்னுடைய பெயர் வெளிவரக் கூடாது என்று நினைக்கும் ஜிம் இந்த வேலைக்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை நாடுகிறார்.

நாகர்ஜுனா பணம் பரிவர்த்தனைக்காக பிச்சைக்காரர்களை தொழிலதிபராக மாற்றுகிறார் ஒவ்வருவர் முலம் ரூ. 10 ஆயிரம் கோடி பரிவர்த்தனை செய்கிறார் வேலை முடிந்த பிறகு பிச்சைக்காரர்களை கொலை செய்து விடுகிறார்.

பிச்சைக்காரர்ரான தனுஷ்..ஷிடம் ரூ. 10 ஆயிரம் கோடி கொடுக்கிறார் நாகர்ஜுனா ஆனால் தனுஷ் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அதே நேரத்தில் கண்களில் கண்ணீரும் சோகமான முகமாக ரயில்வே ஸ்டேஷனில் ராஷ்மிகா மந்தனா அலைகிறார் அவரோடு தனுஷும் இணைகிறார்.

இதனால் பண பரிவர்த்தனை தடைபடுகிறது தனுஷை தேடி நாகார்ஜுனா ஒரு டீமுடன் செல்கிறார். தனுஷ் மாட்டினாரா, காண்ட்ராக்ட் கிடைத்ததா என்பதே மீதி கதை.

இப்படத்தில் தனுஷ் அசல் பிச்சைக்காரனாகவே நடித்து அசத்தியிருக்கிறார் அழுக்கு துணையும் கையில் ஒரு நாய்க்குட்டியுமாக அவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் நம்மை அழ வைக்கிறது.

நடிக்க தனுஷ்..இக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை பின்னி எடுத்திருக்கிறார். எந்த Character கொடுத்தாலும் காதாபத்திரத்திர்க்கு துரோகம் செய்யாமல் நடிப்பார். பியூட்டியாக பார்த்த ரஷ்மிகா இந்த படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார் புதிய ராஸ்மிகாவை குபேராவில் பார்க்கலாம் கிளைமாக்ஸ் வரை தனுஷ் ..இக்கு Tough …கொடுத்து ராஷ்மிகா நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜிம் சர்ப் அருமையாக நடித்திருக்கிறார் சினிமா துறைக்கு ஒரு புதிய வில்லன் கிடைத்திருக்கிறார். பணக்காரர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் அல்ல ஏழைகளும் மனிதர்கள் …..அவர்களுக்கும் இந்த உலகம் சொந்தம் என்று சேகர் கமலா திரையில் அருமையாக சித்தரித்து இருக்கிறார்.

சூழ்நிலை காரணமாக வில்லனோடு கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பு எதார்த்தமாக உள்ளது. பிச்சைக்காரர்களாக வரும் பாக்கியராஜ், சுனைனா, நாசர், தலிப் தஹிநிகேத் ஆகியோரும் அருமையாக நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் எல்லோரும் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருப்பதாக கமெண்ட் செய்திருக்கின்றனர் .

Visual So Classy And Clean. தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை குபேரவுக்கு பக்கபலம் அருமையான ஒரு கதையை பரபரப்பாக கடைசி வரை எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஆனால் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம், கிளைமாக்ஸ் வெயிட்டேஜ் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டிருக்கின்றனர்.

படத்தில் வரும் ஒரே ஒரு பாட்டு அருமை ஆறுதல். முதல் பாதி தடுமாற்றத்துடனும் ஸ்லோவாகவும் தொடங்கி இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.

இப்பொழுது வரும் படங்கள் எல்லாமே First Half மந்தமாக தான் செல்கிறது. பெரிய மைனஸ் ….எடிட்டிங்கில் கோட்டை விட்டுடாங்க படத்தின் இறுதி நாற்பது நிமிடங்கள் பரபரப்பாக செல்கிறது.

தனுசுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் வேற லெவல் பிச்சைக்காரனாக இருந்த தனுஷ் வில்லனையே கடைசியில் பிச்சை எடுக்க வைக்கும் காட்சி அடி தூள். படத்தின் நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் குபேரா வசூலில் குபேரன். புதிய கதை கலம், படம் அருமை, பொறுமை மட்டும் நமக்கு இருந்தால்…. குறை சொல்ல முடியாது சேகர் கமுலா ..வை. Blockbuster Movie…

What do you think?

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜாவை கைது செய்ய கூறி புகார் மனு

செஞ்சி சத்தியமங்கலம் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து