in

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் கிருத்திகை தரிசனம்

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் கிருத்திகை தரிசனம்

 

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் கிருத்திகை முன்னிட்டு தரிசனம் செய்ய வந்த பாடகர் வேல்முருகன் மனம் உருகி பாடினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து மகாதிபாராதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் மற்றும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுகத் திபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தம்பதியராய் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. மயிலம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பாடகர் வேல் முருகனுக்கு கோயிலின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் மைய மண்டபத்தில் பாடகர் வேல்முருகன் உற்சவர்கள் முன்பு மனம் உருகி முருகனை நினைத்து பாடல் பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

சினமா  செய்திகள்

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா