இராமநாதபுரம் மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா
பல்வேறு கிருஷ்ண கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்த தமிழ்நாடு கால்நடை மற்றும் ஆடு வளர்ப்போர் சங்க மாநில பொதுச் செயலாளர் சத்யம் சரவணன்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பிறந்த நாளை உலகெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ண பக்தர்கள் பால்குடம் மற்றும் விளையாட்டுப் போட்டி ,உரியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கால்நடை மற்றும் ஆடு வளர்ப்போர் சங்க மாநில பொதுச் செயலாளர் சத்யம் சரவணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிருஷ்ணர் கோவில்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டது மட்டுமின்றி மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து சட்ட ரீதியாக எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்தும் மக்களின் பிரச்சினைகளை நீதி வேண்டி உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று சட்டரீதியாக போராடி எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


குறிப்பாக பேராவூர், தேர்போகி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார் மக்கள் தங்களின் குறைகளையும் அவரிடம் எடுத்துக் கூறினர்.
முன்னதாக அவருக்கு பொன்னாடை போற்றி சந்தன மாலை அணிவித்து மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வெடி வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


