ஶ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத ஶ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத வைஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பஜனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலையில் உரியடி திருவிழாவும், இரவு சுவாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திண்டிவனம் நம்மாழ்வார் இளைஞர் குழுவினர் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


