கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம்
கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.
கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் பலவிநோத வழிபாட்டு முறைகள் கொண்ட பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் 24 டன் எடையில், 16 அடி உயரமும், 14 அடி அகலம் மற்றும் 16 அடி நீளத்தில் 37 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.