in ,

ஆனி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை

ஆனி மாத பிறப்பை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் தமிழ் மாதத்தின் 3வது மாதமான ஆனி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது

இதனையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது பின்னர் கோவில் பெரிய திருவடி சன்னதி முன்பு கன்றுடன் கூடிய பசு அழைத்துவரப்பட்டு கோ பூஜை நடைபெற்றது தொடர்ந்து பசுவிற்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு அரிசி வெல்லம் பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் கொடுக்கப்பட்டது

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபாடு நடத்தினர்.

What do you think?

நீட் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 27 வது இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்ற நிலை மாணவனுக்கு பாராட்டு

மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார்