in

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தஞ்சாவூரை சோழர்கள் நாயக்கர்கள் மராட்டியர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர் இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர்களில் ஒருவரான 2 ம் சரபோஜியின் 248வது பிறந்த நாள்.

இதையொட்டி தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தர்பார் மண்டபத்தில் அமைந்துள்ள மன்னர் சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் அரண்மனை வளாகம் சரஸ்வதி மகால் நூலக ஊழியர்கள் கலந்து கொண்டு சரபோஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

What do you think?

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்