in

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்

 

அத்தியாவசிய பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி குறைப்பினால் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். நிச்சயமாக தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டு வந்திருக்கும் மாற்றம் தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பிஜேபியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறுகையில்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பினால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்பது மகிழ்ச்சிகரமான செய்தி.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்த பிறகு நாட்டில் உள்ள வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்திலிருந்து ஒன்றரை கோடி நபர்களாக உயர்ந்துள்ளது.
மக்களின் வரிப்பணம் மூலம் நாடு மாபெரும் வளர்ச்சி பெற்று உள்ளது. அமெரிக்கா இந்திய நாட்டின் பொருட்களின் மீது அதிக வரி விதித்திருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.

அமெரிக்கா நாடு இந்திய நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு வந்துள்ளது இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையே காரணம்.

விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ள தஞ்சாவூரில் விவசாய பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி குறைப்பினால் ஏராளமான விவசாயிகள் பயனடைவார்கள்.உரங்களின் மீதான வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கலைப்பொருட்கள், வெண்கல பொருட்கள் மீதான குறிப்பினால் வரி குறைப்பினால் விற்பனையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளுக்கு பூஜ்ஜியம்சதவிகிதம் வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மத்திய அரசு பரிசு வழங்கியுள்ளது என்பது மாற்றுக் கருத்து இல்லை.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அஇஅதிமுக ஆட்சி தொடர மத்திய அரசு உறுதுணையாக இருந்தது என்று எடப்பாடி பழனிச்சாமி உண்மைத் தகவலை தான் தெரிவித்திருக்கிறார். நடிகர்களை பார்க்க வருபவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களிப்பது என்பது சந்தேகத்திற்குரியது.

நடிகர் விஜய் பிரச்சாரத்திற்கு கூடிய கூட்டம் அவரைப் பார்க்க ஆவலாக வந்த கூட்டம், ஆனால் திராவிட முன்னேற்றக் கழக கழகத்திற்கு கூடியிருக்கும் கூட்டம் அவர்களால் கூட்டப்பட்ட கூட்டம் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

திமுக ஆட்சியில் காவல்துறை, பத்திரிக்கையாளர் உட்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை தான் தொடர்ந்து வருகிறது,சட்ட ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது.
2026 ஆண்டுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருந்த பொழுது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருப்பதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணியில் இருந்து விலகிய பிறகு டிடிவி தினகரன் பழனிசாமிக்கு எதிராக கருத்தை தெரிவித்துள்ளார்.

அமமுக வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று என்பதுதான் எங்களின் நோக்கம்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆனால் அவர குறித்து மீது தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவிலிருந்து மற்ற கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை பாரதிய ஜனதா கட்சியை நோக்கியே மாற்று கட்சியினர் வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி பயத்தின் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது திமுக பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறது.

ஜி எஸ் டி வரி சீர்திருத்தத்தைப் பற்றி மக்களிடையே விளக்குவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த பிஜேபி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

What do you think?

புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு புஷ்பங்கி கருட சேவை

செமஸ்டர் தேர்வு என்பது இல்லை தஞ்சையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி