in

மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம்

மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம்

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபதரிசனம் செய்தனர். கார்த்திகை மாதக் கிருத்திகையையொட்டி மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதேபோல் கோவில் வளாகத்தில் காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மூலவரிடம் பூஜை செய்யப்பட்ட கொப்பரை தலையில் சுமந்தபடி கோவில் உட்பிரகாரம் எடுத்து வரப்பட்டு உற்சவமூர்த்தியிடம் பூஜிக்கப்பட்ட பின் பரணி தீபமானது, மகா தீபத்துடன் சேர்க்கப்பட்டு சங்குகன்னர் மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீப ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, கோவில் முன்பு சொக்கப்பனை என்ற பெருஞ்ஜோதி தரிசனம் செய்யப்பட்டது. பக்தர்கள் மயிலம் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்பிரகாரம் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பியபடி வலம் வந்தனர்.

தீபத்திருவிழா வையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

What do you think?

பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா பஞ்ச மூர்த்திகள் வீதி உலா