in

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.

முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

சிறப்பாக கார்த்திகை தீப திருநாளில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழட்வு இன்று இரவு நடைபெற்றது. இதற்காக இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் உள்ள அணைத்து சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து கடற்கரையில் 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து சண்முக விலாச மண்டபத்தில் இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானை அம்பாலுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சவுத் இந்தியன் சினிமாவுல அதிக சம்பளம் வாங்குற நடிகர் 

சன்னாசியப்பன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை பூஜை விழா