in

மேல்மலையனூர் அங்காளம்மன் கார்த்திகை தீப திருநாள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கார்த்திகை தீப திருநாள்

 

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் உற்சவர் அங்காளம்மன் கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலையை நோக்கி அமர்ந்து ஜோதி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீபத்தினை நோக்கி உற்றவர் அங்காளம் தரிசனம் செய்தார்.

கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அதிகாலையே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் மகா தீபத்தினை காண பூசாரிகள் உற்சவர் அங்காளம்மனை வழக்கப்படி தோளில் சுமந்து மேற்கு வாயிலில் எழுந்தருளச் செய்தனர். வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அங்காளம்மனுக்கு அர்ச்சனை ஆராதனையுடன் மகாதீப ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத்தினை காண எழுந்தருளிய அங்காளம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திருமங்கை ஆழ்வாா் திருஅவதார நட்சத்திர விழா

தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது