மீண்டும் இணைந்த கரீனா கபூரின் பெற்றோர்
பிரிந்திருந்த நடிகை கரீனா கபூரின் பெற்றோர் ரந்தீர் கபூரும் பபிதாவும் பல வருடங்களுக்கு பிறகு தங்கள் முதுமையில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளனர்..
கரீனா கபூரின் பெற்றோர் தனித்தனியாக வாழ்ந்தாலும், விவாகரத்து செய்யவில்லை., கரீனா தனது பெற்றோரின் முடிவைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
“எல்லோருடைய பெற்றோரும் உலகின் சிறந்த பெற்றோர். என் பெற்றோரும் உலகின் சிறந்த பெற்றோர். இப்போது, அவர்கள் தங்கள் முதுமையை கைகோர்த்து கழிக்க முடிவு செய்துள்ளனர்.
ரந்தீர் கபூர் மற்றும் பபிதா ‘கல் ஆஜ் அவுர் கல்’ படத்தில் ஒன்றாக பணிபுரியும் போது காதலில் விழுந்தனர்.
பபிதா திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினார். 1988 ஆம் ஆண்டில், பபிதா ரந்தீரிடமிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்து, தனது மகள்கள் கரீனா மற்றும் கரிஷ்மாவுடன் வெளியேறினார். பிரிந்த போதிலும், இந்த ஜோடி விவாகரத்து கோரவில்லை.


