in

உலக சாதனை படைத்த கராத்தே பள்ளி மாணவ மாணவிகள்.

உலக சாதனை படைத்த கராத்தே பள்ளி மாணவ மாணவிகள்.

 

பாபநாசத்தில் ஒரே மேடையில் ஒரே இடத்தில் 36 நிமிடங்கள் 1160 பஞ்சு 1090 கிக்கு செய்து காட்டி அசத்தி…

உலக சாதனை படைத்த கராத்தே பள்ளி மாணவ மாணவிகள்…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரிமா சங்கங்கள் நேருயுகவேந்திரா இணைந்து நடத்திய கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி ஜேக்&ஜில் மெட்ரிக் பள்ளி தாளாளர் மைக்கேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒரே மேடையில் ஒரே இடத்தில் 36 நிமிடங்கள் 1160 பஞ்சுகள்,1090 கிக்குகள் செய்து காட்டி உலக சாதனை படைத்து அசத்தினர்.

உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வழக்கறிஞர் திலீபன் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சான்றிதழ் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிகள் அரிமா சங்க நிர்வாகிகள் மாணவ மாணவிகள் ,பெற்றோர்கள், ஆசிரியர் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள்