கரகாட்டக்காரன் ஜோடி ரீ-யூனியன்
1989-ல கங்கை அமரன் இயக்கத்துல, இளையராஜா இசையில வந்த ‘கரகாட்டக்காரன்’ படத்தை யாராலயும் மறக்க முடியாது.
அந்தப் படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவங்க தான் நடிகை கனகா.
வாரிசு நடிகை: பழம்பெரும் நடிகை தேவிகாவோட பொண்ணுதான் கனகா.
ஆரம்பத்துல அவங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லைன்னாலும், கனகா நடிச்ச முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அவங்களை டாப் ஹீரோயினா மாத்துச்சு.
ராமராஜன் – கனகா மேஜிக்: அந்தப் படத்துல ராமராஜன் கூட அவங்க பண்ணின கெமிஸ்ட்ரி இன்னைக்கும் பேசப்படுது. 80-களின் கடைசியில எல்லா பெரிய ஹீரோக்கள் கூடவும் நடிச்சு செம பிஸியா இருந்தாங்க.
நல்லா போயிட்டு இருந்த நேரத்துல கனகா திடீர்னு சினிமாவையே விட்டு விலகி, ஆளே அடையாளம் தெரியாம போயிட்டாங்க.
பல வருஷத்துக்கு அப்புறம் நடிகை குட்டி பத்மினி அவங்க கூட எடுத்த போட்டோவை பார்த்தப்போ, “இது நம்ம கனகாவா?“னு ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆனாங்க.
இப்போ ரொம்ப வருஷம் கழிச்சு, ‘கரகாட்டக்காரன்’ படத்துல தனக்கு ஜோடியா நடிச்ச ராமராஜனை நடிகை கனகா நேர்ல சந்திச்சிருக்காங்க.
அந்த போட்டோ இப்போ நெட்ல காட்டுத்தீ மாதிரி பரவிட்டு இருக்கு. ரசிகர்கள் குஷி: போட்டோவை பார்த்த ரசிகர்கள், “எங்க ஊரு ராமாயி.. எங்க ஊரு ராமாயி!”னு பாட்டு பாடி, கரகாட்டக்காரன் ஜோடி ரீ-யூனியன்னு கொண்டாடிட்டு வர்றாங்க.


