in

திண்டிவனம் இரட்டணை ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா திருக்கல்யாணம்

திண்டிவனம் அடுத்த இரட்டணை கிராமம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த இரட்டணை கிராமம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவை திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு முன்னதாக மங்கல தாம்பூல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன.

தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியம் மணமகன் கோலத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா மணமகள்கள் கோலத்தில் காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து கலசை பூஜையும் காப்பு கட்டும் வைபவம், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் மங்கள நான் அணிவிக்கும் வைபவம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

மனங்கோலத்தில் உள்ள தெய்வங்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டன. நிகழ்ச்சியும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

கந்த சஷ்டி விழா திருவிழா 3ம் நாள் அபிஷேகம்

புதுச்சேரி அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாக இந்தியா கூட்டணி கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம்