கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார்”
நடிகரும் மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை ஜூலை 25ஆம் தேதி இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் நாடாளுமன்றத்தில் முதன்முறையாகப் பதவியேற்றார்.
KamalHassan, நாடாளுமன்ற வளாகத்திற்கு அதிகாலையில் வந்து தமிழுக்கு பெருமை சேர்த்து வெண்கல குரலில் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார்.
பதவியேற்புக்கு முன்னதாகப் பேசிய அவர், “நான் பதவியேற்று என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன்.
ஒரு இந்தியனாக, நான் என் கடமையைச் செய்வேன்” என்றார். திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் ஜூன் மாதம் மாநிலங்களவைக்கு கமல்ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
பதவி ஏற்பதற்கு முன்னால் கமலஹாசன் மீனவர்கள், விவசாயிகள் நெசவாளர்கள், என்று பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அறிந்து கொண்டு டெல்லி பயணப்பட்டு இருக்கிறார்.
பல தலைவர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடினார் தேர்தலுக்கு முன்னர் தான் தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் ஆனால் கமலஹாசனோ மக்களவை உறுப்பினராக தேர்வாக ஆவதற்கு முன்பே மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்தியது.

