in

ஆதாரத்தை காட்டிய கல்யாண் மாஸ்டர்… அடித்ததை ஒப்புக்கொண்ட  தினேஷ் மாஸ்டர்


Watch – YouTube Click

ஆதாரத்தை காட்டிய கல்யாண் மாஸ்டர்… அடித்ததை ஒப்புக்கொண்ட  தினேஷ் மாஸ்டர்
நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டு இணையத்தில் பரவி வரும் நிலையில் அது குறித்து நடன இயக்குனர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கல்யாண் மாஸ்டர் பேட்டி அளித்துள்ளார்.
துணை நடிகர்கள் சம்பளம் கேட்டதால் அவர்களை அடித்ததற்கான வீடியோவை இணையத்தில் பார்த்தேன் என்று கேட்டதற்கு அவர் அடிக்கவில்லை என்று கூறினார் ஆதாரத்தை நாங்கள் காட்டிய பொழுது லேசாக தட்டினேன் என்றார் எது சொன்னாலும் கேட்டுக் கொள்வதற்கு நாங்கள்  என்ன LKG மாணவர்களா? எனக்கும் தினேஷ்... க்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது இந்த விஷயம் சங்கத்திற்கு வந்ததால் தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
அப்படி கேட்காவிட்டால் வேறு யாருக்காவது திரும்பவும்அநியாயம் நடக்கும்.
தினேஷ் மாஸ்டர்  மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது நாங்களும் போகட்டும் போகட்டும் என்று விட்டு விட்டோம் ஆனால் அவர் இந்த விஷயத்தை சங்கத்தில் வைத்து பேசியிருக்க வேண்டும் வெளியே இந்த விஷயத்தை கொண்டு சென்று அசிங்கப்படுத்தி விட்டார்.
நாங்கள் ஏன் அவர்களை வெளியே கூட்டி சென்றீர்கள் என்று கேட்டதற்கு அவர்களை சமாதானப்படுத்துவதற்கு என்று கூறினார்…கேமரா இல்லாத இடமாக பார்த்து அடித்தீர்களே என்று கேட்டதற்கு அவர்களுக்கு வீடியோ ஆதாரம் கிடைத்திருக்காது என்று நினைத்தேன் ..இன்னு சொன்னார்…. முதலில் சட்டையை பிடித்தேன் என்றார் ஆதாரமாக முழு வீடியோவை  காட்டிய பிறகு லேசாக தட்டினேன் என்றார் பிறகு அடுத்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.
தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி பல வழக்குகள் ஐந்தாண்டுகளாக நடக்கிறது. மேலும் Leo படத்தின் பிரச்சினையும் ஆதாரத்துடன் நாங்கள் கொடுத்து இருக்கிறோம் என்று கூறி கல்யாண் மாஸ்டர்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

What do you think?

தீபிகா படுகோனுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் மணிரத்தினம்

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா