கள்ளழகர் சித்திரை திருவிழா – கால்மேல் கால் போட்டு ராஜாங்க அலங்காரம்
கள்ளழகர் சித்திரை திருவிழா – கால்மேல் கால் போட்டு ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் வைகையாற்றில் தடம்பார்க்கும் நிகழ்விற்காக வைகையாற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது
இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பாடாகினார்.
ஆகிய இதனையடுத்து நான்காம் நாள் நிகழ்வாக மதுரை மூன்றுமாவடி பகுதியில் இருந்து எதிர் சேவை நிகழ்வானது நடைபெற்றது மூன்று மாவடி ,புதூர், டிஆர்ஓ காலனி, ரிசர்வ் லைன் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்சேவை நடைபெற்றது
இதனை தொடர்ந்து 5 ஆம் நிகழ்வாக நேற்று முன்தினம் அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெற்றது தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்று பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்
இதனை தொடர்ந்து 6ஆம் நாள் நிகழ்வாக நேற்று காலை வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளிய பின்பாக நேற்று மாலை மதுரை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து வண்டியூர் அண்ணாநகர், உள்ளிட்ட பகுதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபத்திற்கு எமுந்தருளிய கள்ளழகர் விடிய விடிய தசாவதார அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதையடுத்து அனந்தராயர் பல்லக்கில் கால்மேல் கால்போட்ட ராஜாங்க கோலத்தில் எழுத்தருளிய கள்ளழகர் மதிச்சியம், ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
பின்னர் தடம்பார்க்கும் நிகழ்வாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பகுதியான ஆழ்வார்புரம் வைகையாற்றில் மீண்டும் ராஜாங்க கோலத்தில் இந்து அறநிலையத்துறை மற்றும் லாலாஸ்ரீரெங்கசத்திர மண்டகப்படிகளில் எழுந்தருளி காட்சிதந்தார்.
ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளியபோது வைகையாற்றிற்குள் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்திகோசம் முழங்க கையில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி் தரிசனம் செய்தனர்.
ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீரில் நின்ற பக்தர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
வைகையாற்றிற்குள் மீண்டும் கள்ளழகர் எழுந்தருளிய போது வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மூங்கில்கடை தெரு பகுதி, கோரிப்பாளையம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு எழுந்தருளினார்.
பின்னர் கள்ளழகருக்கு திருமஞ்சனமாகி நள்ளிரவில் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெறவுள்ளது,