கஜானா திரையரங்கு காட்சிகள் நிறுத்தம்
மே 9 ஆம் தேதி வெளியான இயக்குனர் பிரபாதிஷ் சாம்ஸின் புராண திரில்லர் படமான ‘கஜானா’வின் தயாரிப்பாளர்கள், தற்போது தேசிய அளவில் நிலவும் சூழ்நிலை காரணமாக , 70 Theater..கள் பட்டுமே கிடைத்திருகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கோடிகணக்கில் செலவு செய்திருகிறோம், தமிழ், தமிழர்கள் என்று பேசுபவர்கள் இந்த படத்திர்க்கு போதிய திரையரங்குகள் ஒதுக்க வில்லை என்று வருத்தமே, படத்தின் திரையரங்கு காட்சிகளை நிறுத்தவும், பின்னர் மீண்டும் படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ், தயாரிப்பில் “மே 9 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியான ‘கஜானா’ நம்பமுடியாத அளவிற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
தற்போதைய தேசிய நிலைமை மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளைக் கருத்தில் கொண்டு, ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் மற்றும் லியோன் குளோபஸில் நாங்கள் இந்த நேரத்தில் கஜானாவின் திரையரங்கு காட்சியை நிறுத்துவதற்கான முடிவை எடுத்துள்ளோம்.
எந்தவொரு கொண்டாட்டத்தையும் விட எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் மிக முக்கியம். நடிகர்கள் இனிகோ பிரபாகர், வேதிகா மற்றும் சாந்தினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹரீஷ் பேரடி, பிரதாப் போத்தன், யோகி பாபு, கராத்தே கார்த்தி, இளங்கோ, சென்ட்ராயன், விஜயலட்சுமி வீரமணி, கத்தி நரேன், வேலு பிரபாகரன், பூஜா சங்கர் ராஜேஷ் மற்றும் சஹானவெங்கடராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.