காந்தாரா 2 படத்தின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் காலமானார்
காந்தாரா 2 பற்றிய செய்தி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், ரிஷப் ஷெட்டி நடிக்கும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
கன்னட படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் கொல்லூர் சௌபர்ணிகா நதியில் மூழ்கி இறந்தார்.
கேரளாவைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எம்.எஃப். கபில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஆற்றில் நீந்தச் சென்றதாகக் கூறப்படுகிறது. தீ
டிரென்று பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உள்ளூர் அதிகாரிகளும் தீயணைப்புத் துறையினரும் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கினர்.
செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் கபிலின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க பட்டது.
காந்தாரா 2 படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, கொல்லூரில் ஜூனியர் கலைஞர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, காந்தாரா 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. October 2..ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.