பத்திரிக்கையாளர்கள் சங்கம் பொங்கல் விழா
திண்டிவனம், மயிலம், மரக்காணம் மற்றும் வானூர் பகுதிகளின் ஒன்றினைந்த பத்தி ரிக்கையாளர்களின் சங்கம் சார்பில் பொங்கல் விழா திண்டிவனம் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
சங்க தலைவர் அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி ண்டிவனம் சார்-ஆட்சியர் ஆகாஷ் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பாரதி, பொருளாளர் அசேன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியல் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமிழர் முறைப்படி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


