புதுச்சேரி அரசு நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் .
புதுச்சேரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் வேலைவாய்ப்பு முகாம் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில் இன்று தொடங்கியது.

முகாமில் 150 முன்னணி நிறுவனங்கள் 15 ஆயிரம் வேலை வாய்ப்ப நிரப்பப்பட உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்து இண்ட்டகிரா தனியார் நிறுவனத்தில் ரூ 3 லட்சம் ஊதியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பெண் , பணி ஆணை வழங்கி பாராட்டினார்.
முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் பல முயற்சி எடுத்து வருகிறார். புதுவைக்கு பிரதமர் 2021ல் வந்தபோது பெஸ்ட் புதுவை என அறிவித்தார்.
அதை நோக்கியே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது. அரசின் பல துறையில் 10 ஆண்டுக்கும் மேல் நிரப்பப்படாமல் இருந்த காலி பணியிடங்களில் 5 ஆயிரம் பணியிடங்களை அரசு நிரப்பியுள்ளது என்றும்
தனியார் மூலம் மாணவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
என்பதற்காக பல நிறுவனங்களை அணுகி அரசு வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மார்ச்1ம் தேதி பிரதமர் புதுச்சேரிக்கு வர உள்ளார். இந்த நேர்முக தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரதமர் கையால் பணி ஆணை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசுகையில், புதுச்சேரியில் ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் படிப்பை முடிக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் அரசு துறைகளில் வேலை கிடைப்பது இயலாத காரியம். பிரதமர் முயற்சியால் நடைபெறும் தேசிய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தகுதியான வேலையும் நம்பிக்கையான வாழ்க்கையும் கிடைத்துள்ளதாக கூறினார்..
விழாவில் சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, உயர்கல்வித் துறை செயலர் முகமது ஆசின் அபித், இயக்குனர் சிவகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.


