மோகன்லால் பதவி விலகியதால், ஜெகதீஷ், ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்
மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய மோகன்லால் பதவி விலகியதை அடுத்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிட நடிகர்கள் ஜெகதீஷ், ஸ்வேதா மேனன் மற்றும் நான்கு பேர் தலைவர் பதவிக்கு வேட்புமனுக்களை கொடுத்தனர்.
சினிமாவில் பெண்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, AMMA நிர்வாகக் குழு ராஜினாமா செய்தது.
தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 11 நிர்வாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், பல நடிகர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர்.
அனூப் சந்திரன், தேவன், அன்சேபா ஹாசன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஸ்வேதா வெற்றி பெற்றால், சங்கத்திற்கு முதல் பெண் தலைவர் கிடைப்பார். இது வரை 74 பேர் மனுதாக்கல் செய்திருகின்றனர்.
இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நடிகர்களின் வேட்புமனுவால் சங்கத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன., குற்றச்சாட்ட பட்டவர்கள் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அனூப் கூறினார்.


