in

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழா

 

இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ இந்திராணி அம்மன் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை ஸ்ரீ வென்னியம்மன் ஆலய செடல் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெண்ணியம்மன் ஸ்ரீ இந்திராணி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு ஸ்ரீ வென்னியம்மன் மற்றும் வீரபத்திரர் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஸ்ரீ இந்திராணி அம்மனாகய பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று நிகழ்ச்சிக்கான உபயதாரர் நெடி கிராம குலதெய்வ வழிபாட்டாளர்கள்.

மேலும் விழாவுக்கான ஏற்பட்டினை இரட்டணை கிராம தேவதைகள் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் கிருத்திகை தரிசனம்

ஏரிக்கரை ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா