விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார் இஸ்ரோ தலைவர் நாராயணன்
நாளை 101 வது விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கும் நிலையில் விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டார் இஸ்ரோ தலைவர் நாராயணன்.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோ நாளை தன்னுடைய 101வது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.
நில கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய தேவைகளுக்காக நாளை அதிகாலை இஸ்ரோ ரிசார்ட் பி என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது.
இஸ்ரோவின் 101 வது விண்கலம் நாளை விண்ணில் சீறி பாய இருக்கும் நிலையில் இன்று அந்த விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி மலைக்கு விஞ்ஞானிகள் குழுவினருடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் வந்திருந்தார்.
விஐபி பிரேக் தரிசனம் மூலம் அவர் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவருக்கும் விஞ்ஞானிகள் குழுவினருக்கும் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேதபண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
முன்னதாக நாளை விண்ணில் பாய இருக்கும் விண்கலத்தின் மாதிரி ஏழுமலையான் திருவடிகளில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோ ஒவ்வொரு முறையும் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன் அதன் தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவில், சூலூர் பேட்டையில் உள்ள செங்கம் செங்காளம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபாடு மேட்புக் கொள்வது வழக்கம்.