ThugLife OTT…யில் வெளியாகிறதா?
கமல்ஹாசனின் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தக் லைஃப் கடந்த வாரம், திரைக்கு வந்தது, படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.
ஜூன் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், முதல் நாள் இந்தியாவில் ரூ.15.5 கோடியை வசூலித்தது.
முதல் வார இறுதியில் சுமார் ரூ.36 கோடி வசூலித்தது.இந்தப் படம் நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.40 கோடி வசூலித்தது.
வியாபாரம் சரிந்ததால், OTT தளத்தில் முன்கூட்டியே வெளியிடுவதாக செய்திகள் பரவத் தொடங்கின. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, கமல், எட்டு வாரங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் படம் வெளியிடப்படும் என்று, கமல் கூறினார்., ” ThugLife மிகபெரிய தோல்வியை தழுவியதால் OTT வெளியீடு முன்கூட்டியே அறிவிக்க படலாம் என்று வர்த்தக நிபுணர்கள் நம்புகின்றனர்.
படம் எட்டு வாரங்களுக்குப் பதிலாக நான்கு வாரங்களுக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கலாம் என்ற ஊகம் உள்ளது. இருப்பினும், நெட்ஃபிளிக்ஸ் அல்லது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.