மணிரத்னத்தின் ThugLife தீப்பொறியா? சறுகளா? ThugLife Movie Review
‘தக் லைஃப்’ மணிரத்னம் இயக்கி, கமல்ஹாசனுடன் இணைந்து எடுக்கபட்ட கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமா ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைந்தால் எதிர்பார்ப்புகள் எகிறியது.
இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ThugLife விமர்சனம் பார்போம் .
கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், மகேஷ் மஞ்சரேக்கர் மற்றும் பலர்
தயாரிப்பாளர்கள் : கமல்ஹாசன், மணிரத்னம், ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த், உதயநிதி ஸ்டாலின்
இசை :ஏ.ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவாளர்: ரவி கே.சந்திரன்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
ரங்கராய சக்திராஜு (கமல்ஹாசன்) மற்றும் மாணிக்யம் (நாசர்) ஆகியோர் புது தில்லியில் சக்திவாய்ந்த கும்பல்களாக உள்ளனர்.
தனது இளமைப் பருவத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டின் போது, சக்திராஜு அமர் (சிம்பு) என்ற ஒரு குழந்தையைக் கண்டுபிடித்து, அவரை தனது சொந்தக் குழந்தையாக வளர்க்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சக்திராஜு சிறையில் அடைக்கப்படுகிறார், அமர் தனது கட்டுப்பாட்டில் அனைத்தும் கொண்டுவருகிறார். இருப்பினும், ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் அமரை ரங்கராய சக்திராஜு ..இக்கு எதிராகத் திருப்புகிறது.
பழிவாங்கலில் மூழ்கி, சக்திராஜுவை வீழ்த்துவதற்காக அவர் போட்டி கும்பல்ளுடன் கூட்டணி வைக்கிறார். இருவருக்கும் இடையேயான மோதலுக்கு என்ன காரணம்? சக்திராஜு பிழைப்பாரா? அமரின் கடந்த காலம் என்ன, அவரது குடும்பத்திற்கு என்ன நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ThugLife.
கமல்ஹாசன் நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை பின்னிஇருக்கிறார், சிம்பு மற்றும் நாசருடன் மோதும் காட்சிகளில் அவரது வசனங்கள் செம்ம தெறி,. கமலின் இளைமையான தோற்றம், ரசிகர்களுக்கு விருந்து. கமலுக்கு Equal…லான Character Weightage சிம்புவுக்கு வழங்கப்பட்டிருகிறது,. கமலுடன் அவரது கெமிஸ்ட்ரி ஒரு சில காட்சிகளில் நன்றாக இருக்கிறது.
மேலும் அவர்களின் மோதல்கள் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருகிறது. அபிராமி தனக்கு வழங்கப்பட்ட குறைந்த நேரத்தில் சிறப்பாக நடித்திருகிறார், மற்ற துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடிதிருகிறார்கள்.
கமல்-மணி கூட்டணி வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தாலும், தக் லைஃப் படம், கணிக்கக்கூடிய கதைக்களத்தால் படம் பாதிக்கப்படுகிறது. புதிய கதையாக அல்லது மறக்கமுடியாததாக ஏதாவது ஒன்றை உருவாக்கி இருந்தால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கிஇருக்கலாம்..
கமல் மற்றும் மணி இருவரும் திரைக்கதை எழுத்தாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள் ஆனால் படத்தில் கூர்மை இல்லை முதல் பாகத்தை விட இரண்டாம் பாதி Slow…வாக நகர்கிறது…
கிளைமாக்ஸ்..இல் தொய்வை சரி செய்து விட்டார்கள். சிம்பு அருமையாக நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் ஏமாற்றமளிக்கிறது. வலுவாகத் தொடங்கினாலும், பிற்பாதியில் அவரது பாத்திரம் உணர்ச்சிபூர்வமாக இல்லாமல் மணி வரை வேஸ்ட் செய்திருக்கிறார் – அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்லாதது பெரிய தவறு.
த்ரிஷாவின் கதாபாத்திரம் தேவையற்றது’ மணிரத்னம் மீதான விசுவாசத்தால் அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார் என்பது’ புரிகிறது .. அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்ற திறமையாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை.
மணிரத்னம் தனது பாணியில் கதை சொல்ல மறந்து படத்தை சொதப்பிவிட்டார். ஏ.ஆர்.ரஹ்மானின் பலவீனமான இசை அதிர்ச்சியளிகிறது பாடல்கள் மற்றும் ஒலிப்பதிவு அருமை. எடிட்டிங் சொதப்பல்.
மொத்தத்தில், தக் லைஃப் திரைப்படம், நிறைவேறாமல் போன ஆசை. கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும், படம் பார்வையாளர்களை ஈர்க்கவோ, ஆச்சரியப்படுத்தவோ அல்லது உணர்ச்சி ரீதியாக நெகிழ வைக்க தவறிவிட்டது..
ரசிகர்களுக்கு கூட, இது ஒரு ஏமாற்றமளிக்கும் படமாக இருக்கலாம். பிடித்த இயக்குனர் ஒரு சாதாரணமான படத்தை எடுத்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை ..Thug ரசிகர்களை’ ஹக் பண்ணவில்லை.. so sad…!!!!


