ஹன்சிகா சோஹேல் கதுரியாவை பிரிகிறாரா?
சம்பர் 4, 2022 அன்று ஜெய்ப்பூரில் ஆடம்பரமாக ஹன்சிகா மோத்வானி சோஹேல் கதுரியாவை மணந்தார்.
ஹன்சிகா மோத்வானியும் அவரது கணவர் சோஹேல் கதுரியாவும் திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் செய்திகளுக்கு ஹன்சிகா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“ஹன்சிகா தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார், அதே நேரத்தில் சோஹேல் தனது பெற்றோருடன் வசித்து வருவதாக “கிசுகிசுக்கள் பரவிவரும் நிலையில் . அவரது கணவர் குறுஞ்செய்தியில் “அது உண்மை இல்லை.” என்று பதிலளித்தார் .
திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகாவும் சோஹேலும் ஆரம்பத்தில் தனது பெரிய குடும்பத்துடன் வாழ முடிவு செய்தனர். இருப்பினும், ஒரு பெரிய குடும்பத்துடன் வாழ்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சோஹேலின் பெற்றோர் இருந்த அதே கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு குடிபெயர்ந்தனர்.
இந்த மாற்றத்திற்குப் பிறகும் அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்ததால் ஹன்சிகா அவரது தாயார் வீட்டில் தங்கி இருக்கிறார்.
ஹன்சிகா தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர் சோஹேலை மணந்திருக்கிறார்.