in

பாரதிராஜா மறைவா!? வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்!


Watch – YouTube Click

பாரதிராஜா மறைவா!? வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்!

 

‘சிவப்பு ரோஜாக்கள்’ தொடங்கி ‘முதல் மரியாதை’ வரை தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய நம்ம இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள், கடந்த வாரம் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் தனது மகன் மனோஜின் மறைவால் பாரதிராஜா அவர்கள் ரொம்பவே மனமுடைந்து போயிருந்தார்.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, திடீரென சுவாசப் பிரச்சினை (Wheezing) ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர் மருத்துவமனையில் சேர்ந்ததுமே சோஷியல் மீடியாவில் சில தேவையில்லாத வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

இதை பார்த்த அவரது உறவினர்களும் நண்பர்களும் உடனடியாக விளக்கம் கொடுத்துள்ளனர்: “அவர் நல்லா இருக்காரு, பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லை.” “சிகிச்சை முடிஞ்சு சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவாரு.

” “தயவுசெஞ்சு தப்பான தகவல்களைப் பரப்பாதீங்க”ன்னு சொல்லியிருக்காங்க.மருத்துவமனை தரப்பிலும் ஒரு அறிக்கையை ரிலீஸ் பண்ணிருக்காங்க.

அதுல, “பாரதிராஜா அவர்களுக்கு மூச்சுத்திணறலுக்குத் தேவையான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருது.

இப்போ அவரோட உடல்நிலை சீராக (Stable) இருக்கு. டாக்டர்கள் டீம் அவரைத் தொடர்ந்து கவனிச்சுக்கிட்டு இருக்காங்க”ன்னு சொல்லியிருக்காங்க.

நம்ம தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம் பாரதிராஜா சார். அவர் சீக்கிரம் குணமடைந்து பழையபடி கம்பீரமா திரும்பி வர நாம எல்லாரும் வேண்டிக்கிப்போம்!

What do you think?

பிக்பாஸ் 9 அதிரடி: ஒரே நேரத்துல ரெண்டு ‘ரெட் கார்டு’! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நெல்லையில் 796 நியாயவிலை கடைகள் மூலம் 5 லட்சத்து ஆயிரத்து 769 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி நடந்து