அரிஜித் சிங் பாடுறத நிப்பாட்ட போறாரா?
என்னங்க சொல்றீங்க? அரிஜித் சிங் பாடுறத நிப்பாட்ட போறாரா? ஆமாங்க, பாலிவுட் மியூசிக் உலகத்துக்கே ஒரு பெரிய ஷாக் நியூஸ் இதுதான்.
கடந்த பத்து வருஷமா நம்ம எல்லாருடைய லவ் ஃபெயிலியர், சந்தோஷம், கண்ணீர் எல்லாத்துக்கும் பின்னால இருந்த அந்த மேஜிக் குரல் இனிமே புதுசா ஒலிக்காதுன்னு அவர் சொல்லிட்டாரு.
அவரோட இன்ஸ்டாகிராம் போஸ்ட்ல, “இனிமே நான் பிளேபேக் சிங்கரா எந்த புது பாட்டும் பாடப்போறதில்லை”ன்னு ரொம்ப வருத்தத்தோட அறிவிச்சிருக்காரு.
ஆனா ரசிகர்களுக்கு ஒரு சின்ன நிம்மதி என்னன்னா, அவர் ஒரு மியூசிக் கம்போசராத் தொடர்ந்து வேலை செய்யப்போறேன்னு சொல்லியிருக்காரு.
2013-ல வந்த ‘தும் ஹி ஹோ’ பாட்டுல ஆரம்பிச்சு, நேத்து வந்த ‘கேசரியா’ வரைக்கும் அரிஜித் பாடுன பாட்டு எல்லாமே வேற லெவல் ஹிட். தமிழ்ல கூட ‘நான் உன் அழகினிலே’ பாட்டு மூலமா நம்ம மனச கொள்ளை அடிச்சாரு.
எதுக்காக இந்த திடீர் முடிவுன்னு யாருக்கும் தெரியல. ஆனா, “ஒரு ஜெனரேஷனோட குரல்” ஓய்வு பெறுறது இந்திய இசை உலகத்துக்கே ஒரு பெரிய இழப்புதான்.
இனிமே புது பாட்டுல அவர் குரல் கேட்கலைன்னாலும், அவர் பாடின பழைய ஹிட் சாங்ஸ் எப்பவும் நம்ம பிளேலிஸ்ட்ல கேட்டுக்கிட்டே தான் இருக்கும்!
