நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா..? வைரலாகும் போஸ்டர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர் உடன் நடிகர் சூர்யா பிறந்தநாள் போஸ்டர்- நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா..? வைரலாகும் போஸ்டர்.!
“தலைவா தலைமையேற்க வா” நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் என்ற வாக்கியத்தில் அதிமுக, திமுக கட்சி கொடி வண்ணத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா பிறந்தநாள் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கங்கள் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை வடக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் எம்ஜிஆர் புகைப்படத்துடன் சூர்யா புகைப்படம் இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் என்ற வாக்கியத்தில் அதிமுக, திமுக கட்சி கொடி வண்ணங்கள் இடம் பெற்றுள்ளது.
“தலைவா தலைமையேற்க வா” என அரசியலுக்கு அழைப்பது போன்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் விஜய் தொடர்ந்து சூர்யாவும் அரசியலுக்கு வர ரசிகர்கள் அழைப்பு விடுகிறார்களா என்று மக்களிடையே என்னத்தை ஏற்படுத்தியுள்ளது.


